சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.
77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது.
உள்நாட்டலுவல்கள், மாகாணசபை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு வருமாறு,
முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை என சுதந்திர தின அணிவகுப்பில் மொத்தமாக 4,421 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இராஜதந்திரிகளுக்கு வழமைபோல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்.
