சூடானில் சிக்கியுள்ள இலங்கையரை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமென வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். மோதல்களை
அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கைமுடிவுக்குக் கொண்டுவருமாறு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை கேட்டுக்கொள்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே சாத்தியமான நிரந்தரமான தீர்வென தெரிவித்துள்ள அமைச்சர் அலிசப்ரி, சூடான் மக்களுக்கு அமைதி சமாதானம் ஸ்திரத்தன்மை முன்னேற்றம் போன்றவை கிட்டவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். சூடானிலுள்ள இலங்கையரின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், இந்த விடயத்தில் இந்தியா வழங்கிய உதவிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு சில நாட்களில் சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையரை பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமென நம்பிக்கை கொண்டுள்ளோமெனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
