மலையகத்திற்கு செந்தில் தொண்டமான் போன்ற இளம் தலைமைத்துவமே அவசியம் என கமியூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமானை ஆதரித்து, முத்துலிங்கம் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் உரையாற்றும்போதே முத்துலிங்கம் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளம் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்களை அடிமைகளாகவே கம்பனிகள் நடத்தி வந்தன. அடிமையாக இருந்தால் மட்டுமே கம்பனிகள் சலுகைகள் வழங்கப்பட்டன என்றும் இதனை முதன்முறையாக தட்டிக்கேட்டவர் செந்தில் தொண்டமான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடுகளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை கம்பனிகளே இதுவரை முடிவெடுத்ததாகவும், இனிமேல் இதனை அரசாங்கமே முடிவெடுக்கும் என்றும் இதற்கு அடித்தாளமிட்டவர் செந்தில் தொண்டமான் என்றும் முத்துலிங்க்ம குறிப்பிட்டார்.
மலைய மக்களை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்துவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க பொருத்தமானவர் செந்தில் தொண்டமான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை மாற்றுக் கொள்கைகளில் செயற்பட்டிருந்தாலும், செந்தில் தொண்டமான் போன்ற தலைமைகளை ஆதரிப்பதற்காக தற்போது அவரது வெற்றியை உறுதிசெய்ய தீர்மானித்ததாகவும் கமியூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்துலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.