ஜனநாயக சமருக்காக கருணா, பிள்ளையான் சங்கமம்!

கிழக்கு மாகாணத்தில் உதயமாகியுள்ள ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” எனும் புதிய அரசியல் கூட்டணியில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும் இணைந்துள்ளார்.

பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் இணைந்து இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டனர்.

மட்டக்களப்பிலுள்ள ஹோட்டலொன்றில் இதற்குரிய நிகழ்வு இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து உள்ளுராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.

இதன்பலனாக ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம் இக்கூட்டணில் கடந்த 15 ஆம் திகதி இணைந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையிலேயே கிழக்கு தமிழர் கூட்டமைப்பில், கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இன்று இணைந்துள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் இக்கூட்டணி களமிறங்கியுள்ளது.

Related Articles

Latest Articles