ஜனநாயக வழியில் ஆட்சியை பொறுப்பேற்க தயார்!

“வீடுகளைக் கொளுத்தி அறகலயமூலம் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எம்மிடம் ஆயுத படை இல்லை. வீடுகளை கொளுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொன்று , அறகலய மூலம் ஆட்சியை பிடிக்க மாட்டோம். ஜனநாயக வழியில் எமது பயணம் தொடரும்.

ஆளுங்கட்சியிலுள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களால் பலனில்லை என ஜனாதிபதி கருதினால் இரண்டரை வருடங்களுக்கு பிறகு , நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல முடியும்.

எம்மிடம் வேலைத்திட்டம் உள்ளது, தூரநோக்கு சிந்தனை உள்ளது. கடந்த காலங்களில் செயல்பட்ட அனுபவம் உள்ளது. எனவே, ஜனநாயக வழியில் எந்நேரத்திலும் ஆட்சியை பொறுப்பேற்க தயார்.

எந்த கட்சியாக இருந்தாலும் இளைஞர்களை பொறுப்புடன் வழிநடத்த வேண்டும். புதிய இலங்கையை கட்யெழுப்பும் வகையில் நாம் இளைஞர்களை வழிநடத்துவோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles