ஜனாதிபதி உரை- மின் தடைகள் ஏற்படாது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் எந்தவொரு பகுதியிலும் மின் தடைகள் ஏற்படாது.

ஜனாதிபதி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் இன்று அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அட்டவணையின்படி, இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை மின் தடைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இன்று மாலை 8.00 மணியுடன் மின்வெட்டு முடிவடைந்து, நியமிக்கப்பட்ட பிரிவுகளில் இரவு 9.30 மணி முதல் அமலுக்கு வரும்.

Related Articles

Latest Articles