ஜனாதிபதி – கூட்டமைப்பு விரைவில் பேச்சு!

“சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்துவார்.”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வகட்சி அரசு தொடர்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் பேச்சு நடத்துவார். இதன்போது, சர்வகட்சி அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு எந்த விதத்தில் அமையும் என்பது தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிவார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. எனவே, நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாதது” – என்றார்.

Related Articles

Latest Articles