ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது தவறானதொரு முடிவாகவே இருக்கும். உரிய நேரத்துக்குள் அத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த மேற்கண்டவாறு கூறினார்.
” இது தொடர்பில் எனக்கு அறியக்கிடைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அது தவறு. உரிய நேரத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் எமது பக்கம் நின்று ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றேன்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
மொட்டு கட்சியின் தலைமைப்பதவி குறித்து எழுப்பட்ட கேள்விக்கு,
” எதிர்காலத்தில் நிச்சயம் மாற்றம் வரும், என்நாளும் என்னால் பதவியில் இருக்க முடியாது அல்லவா…” – என பதிலளித்தார் மஹிந்த.
