ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு!

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்- அண்ட்ரே பிரேன்சே (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் நிலவும் நீண்டகால மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு இணையாக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும், 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தின் (Humanitarian Priorities Plan – HPP) அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளான அஸாம் பாக்கீர் மாக்கார் (Azam Bakeer Marker), வகீஷ பெரேரா மற்றும் டி.சி.எம்.என்.ஆர்.டி. குரே (TCMNRT Cooray) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles