ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்கப்போவதில்லை. அவருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாரில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசுடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க கூறியவை வருமாறு,
“ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை. எமது கட்சியை அவர் அழித்தார். புதிய தலைவர்களை உருவாக்க இடமளிக்கவில்லை. இதனால் எமது கட்சி உறுப்பினர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரணிலுடன் எமக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கலும் இல்லை. பலமான அரசியல் கூட்டணியாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்.” – என்றார்.
