ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணம் சர்வதேசத்துக்கான செய்தியா?

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்தில் உள்நோக்கம் எதுவும் இருக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது,

” கச்சத்தீவு பற்றி தமிழக அரசியல் களத்தில் பேசப்படுகின்றது. இந்நிலையில் வடக்கு விஜயத்தின்போது ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்றிருந்தார். இது சர்வதேசத்துக்கு வழங்கப்பட்ட ஓர் செய்தியா என அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

” சில அரசியல்வாதிகளின் அறிவிப்புகள் பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. எமது நாட்டிலும் அப்படியான அறிவிப்புகளை விடுக்கும் அரசியல்வாதிகள் உள்ளனர்.
கச்சத்தீவு இலங்கைக்கு உரிய தீவாகும்.

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் இராஜதந்திர ரீதியில் எவ்வித பிரச்சினையும் எழவில்லை.
கச்சத்தீவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயமே செய்தார். இதில் வேறு நோக்கம் இருக்கவில்லை. இலங்கைக்கு உரித்தான தீவுக்கே ஜனாதிபதி சென்றிருந்தார்.” – என்று பதிலளித்தார் அமைச்சர்.

Related Articles

Latest Articles