ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் ஏற்படவுள்ள மாற்றம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியளிக்கும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா செல்கின்றார், சீனாவின் எக்ஸிம் வங்கி, கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. சீனாவின் இந்த ஒத்துழைப்புடன் புதிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கடன் மறுசீரமைப்பை முடிவுக்கு கொண்டுவரலாம். இது பாரிய வெற்றியாகும். ஜனாதிபதியின் சிறந்த வெளிவிவகாரக் கொள்கையால்தான் இந்த பலன் எல்லாம் கிடைக்கின்றது.” – என்றார்.

ஜனாதிபதி நாளை சீனா செல்கின்றார்.

Related Articles

Latest Articles