ஜப்பானில் தொழில் தருவதாக மோசடி – பெண் கைது!

ஜப்பானில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி இளைஞரொருவரிடம் 870,000.00 நிதியை மோசடி செய்த பெண்ணொருவரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜப்பானில் தொழிற்சாலைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி அளுத்கம தர்காநகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் மேற்படி பெண்மணி பணத்தைப் பெற்றுள்ளார். எனினும், உறுதியளித்தபடி அப்பெண் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவில்லை. இதுதொடர்பில் அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் கடந்த (12) பெண்மணி வசிக்கும் கந்தானை பகுதிக்குச் சென்று அவரைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் அன்றைய தினமே களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு 10,00,000 ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலதிக விசாரணையை எதிர்வரும் மார்ச் (24) நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles