டயகமவில் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவத்தனர்.

டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த டயகம பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles