ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயான கமகேவின், பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யக்கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை கடிதம் அனுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததால் டயானா கமகேவை கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










