டிக்கோயா -கிளங்கன் வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் கட்டிட,உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக தொடர்ந்தும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது.

இதனை தொடர்ந்து திடீரென வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகளை நேரில் பார்வையிட்டதுடன் வைத்தியர்களின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்யும் வகையில் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 8.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வைத்தியசாலைக்கு சென்று அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைப்பாடுகளை பார்வையிட்டு மிக விரைவில் அதன் கட்டுமான பணிகளை பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

– ஊடகப் பிரிவு

Related Articles

Latest Articles