டிசம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ குறித்த அறிவிப்பு…….

‘அஸ்வெசும’ டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக தற்போது இனம்காணப்பட்டுள்ளன.

இதன்படி, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை 51,967 மில்லியன் ரூபாவாகும்.

அஸ்வெசும பயனாளி குடும்பங்களில், 303,199 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 606,496 ஏழ்மையான குடும்பங்கள், 290,624 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் 209,745 நடுத்தர குடும்பங்கள் என இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles