தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம் நடைமுறையில்

இந்திய – இலங்கை இணைந்த திட்டமான ‘இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம்’ (SL-UDI) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் தெரிவித்தார். அதற்கமைய, இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நபர்களின் சுய விபரங்கள், உயிரியளவியல் (biometrics) தகவல்களை (முகம், கருவிழி மற்றும் கைரேகை) பெற்று மத்திய அமைப்புக்குள் உள்வாங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான தொழிநுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், பிரஜைகளின் பிறப்புச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும் ஒரு தனித்துவமான இலக்கத்தின் கீழ் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பான பிரேரணை உள்வாங்கப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் பலவீனம் காரணமாக அது தடைப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தாமதங்களையும் பின்னடவைவையும் ஏற்படுத்தும் கடந்த கால ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒரு தொகுதியிலிருந்து புதிதாகத் தொடங்கி முன்னோக்கிச் செல்லும் வகையில் செயற்படுமாறு குழு அறிவுறுத்தியது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles