‘தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் யாழில் திடீர் மரணம்’

யாழ்ப்பாணம் காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரை கோவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.எனினும் அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு அரைவாசியாகக் குறைந்ததால் உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்புத் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையை செய்வதா? அல்லது பிசிஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் உற்கூற்றுப் பரிசோதனையைச் செய்வதா? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

Related Articles

Latest Articles