தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்! ஞாயிறன்று யாழ். மாவிட்டபுரத்தில் இறுதிக்கிரியைகள்!!

தமிழினத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக அஹிம்சை வழியில் இறுதி வரை அயராது போராடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்மாவை சேனாதிராஜா (வயது 82)நேற்று இரவு காலமானார்.

மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காலமானார்.

நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டில் தவறி தலை அடிபட வீழ்ந்த மாவை சேனாதிராஜா, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

சி.ரி. ஸ்கான் பரிசோதனையில் அவரின் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்தனர்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கைச் சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று யாழ். போதனா வைத் தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அன்னாரின் மறைவுக்கு அரசியல்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.

மறைந்த மாவை சேனாதிராஜா வின் இறுதிக்கிரியை நிகழ்வு எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு
யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னா
ரின் இல்லத்தில் இடம்பெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles