தமிழர்களின் ஆதரவை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஜனாதிபதி: கம்மன்பில புகழாரம்!

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை தேர்தல் வரலாற்றில் தனித்த அரசியல் கட்சி ஒன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் ஆதரவை முழுமையாக வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலைக் காட்டிலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். நான் மாயாஜால வித்தைக்காரரல்ல என்று ஜனாதிபதி குறிப்பிட்டமை முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி உண்மையில் மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் பெற்று ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளமைக்கு நன்றியும், அரசுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அரசைக் கைப்பற்றுவற்காக நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு தோற்றம் பெற வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தினோம்.

இந்த மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை 2025 மார்ச் மாதத்துக்குப் பின்னர் சமர்ப்பிப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தில் இருந்து விலகி பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதா ? அல்லது செயற்றிட்ட பரிந்துரைகளைச் செயற்படுத்தி அரசியல் நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதா? என்பதில் ஒன்றை அரசு தீர்மானிக்க வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது.

நான் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்கின்றேன். எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றேன். கிழமையில் இரண்டு நாட்கள் நீதிமன்றத்துக்குச் செல்வேன். மிகுதி நாட்கள் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles