தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழரசுக் கட்சி தடை!

கட்சியின் அனுமதியின்றி பிற தரப்புகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரன் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க தமிழரசுக் கட்சி ஏகமனதாக முடிவெடுத் துள்ளது.

இது தொடர்பில், ஒரு வாரத்துக்குள் பதில் கிடைக்கக் கூடியதாக விளக்கம ளிக்கும்படி அரியநேத்திரனுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தவும், அவரது நியாயமான விளக்கம் கிட்டும் வரை கட்சியின் எந்த நிகழ்வுக்கும் – எந்தக் கூட்டங்களுக் கும் – அவரை அழைக்காமல் விடவும் தீர் மானிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான எம்.ஏ.சுமந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles