தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் பதவி பேராசிரியர் விஜயசந்திரனுக்கு?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியை, பேராசிரியர் விஜயசந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த சந்ரா சாப்டர், தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.

இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக செயற்படும் பேராசிரியர் விஜயசந்திரனை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் செயலாளர் பதவி ஆரம்பத்தில் மலையக மக்கள் முன்னணிக்கே வழங்கப்பட்டது. லோரன்ஸ் பொதுச்செயலாளராக செயற்பட்டார். அவர் பதவி விலகிய பின்னர் சந்ரா சாப்டர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே செயலாளர் பதவியை மலையக மக்கள் முன்னணி மீண்டும் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles