தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு புதிய செயலாளர் நியமனம் எப்போது?

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கான புதிய பொதுச்செயலாளரை விரைவில் நியமிக்குமாறு மலையக மக்கள் முன்னணி, கூட்டணியின் அரசியல் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளராக செயற்பட்ட சந்திரா சாப்டர், தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.

எனினும், புதிய பொதுச்செயலாளர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

முற்போக்கு கூட்டணியின் ஸ்தாபக பொதுச்செயலாளராக மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் லோரன்ஸ் செயற்பட்டார்.

எனவே, புதிய பொதுச்செயலாளர் பதவியை ம.ம.முவின் தற்போதைய பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரனுக்கு வழங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையிலேயே புதிய செயலாளரை நியமிக்குமாறு ம.ம.மு. கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles