ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று (22) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
குறித்த நான்கு வீ்டுகளிலும் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை. பொருட்கள் சேதமடைந்துள்ளன.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை நோர்வூட் பிரதேச சபை தவிசாளரும், அட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் எஸ்.ரட்ணகுமாரும் இணைந்து வழங்கியுள்ளனர்.
க.கிஷாந்தன்










