எரிபொருள் கப்பலொன்று இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது 92 ஒக்டேன் பெற்றோல் சுமார் 42 ஆயிரம் மெற்றிக் டொன் அரசாங்கத்தின் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நண்பகல் 12 மணி வரை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் 14 ஆயிரத்து 41 மெற்றிக் டொன் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
