ஹட்டன் விஞ்ஞான சமூக அமைப்பினரின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் உயிரியல் வினா விடைப் போட்டிகள் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைப்பெற்றது.
ஹற்றன், நுவரெலியா, கொத்மலை,வலப்பனை, நாவலப்பிட்டி கல்வி வலயங்களைச் சேர்ந்த 13 பாடசாலைகளிலிருந்து 500 இற்கும் மேற்பட்ட உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.
இதில் தரம் 12 மற்றும் 13 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் எழுத்து மூல போட்டிப் பரீட்சையும், பாடசாலைகளுக்கிடையே ஓர் வினாவிடைப் போட்டியும் நடத்தப்பட்டன.
வினாவிடைப் போட்டியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினை பெற்றது. அனைத்து மாணவர்களும் பெற்றுக் கொண்ட மொத்த புள்ளிகளின் அடிப்படையில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இம் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் திருமதி.ரோஹிணி மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்










