” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தவறான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.” – என்று முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
” மக்கள் கவலையில் உள்ளனர். வாழ்க்கைச் சுமை அதிகரித்திருக்கின்றது. அரசின் பயணம் தவறு என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.
எனது அரசியல் பயணம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இறுதி மூச்சு இருக்கும்வரை அரசியல்வாதிகளால், அரசியலை விட்டு செல்ல முடியாது. அவ்வாறு செல்வோம் எனக் கூறுவது பொய்.
எதிரணிகளின் வேலைத்திட்டம் என்னவென்பது பற்றி அவதானித்துக்கொண்டிருக்கின்றேன்.” -எனவும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன.










