தாண்டவமாடுகிறது டெங்கு – ஒரு வாரத்துக்குள் 2,142 பேர் பாதிப்பு!

இந்த வருடத்தின் முதல் வாரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 142 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 440 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர, கொழும்பில் 433 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 273 டெங்கு நோயாளர்களும், கல்முனையில் 147 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணத்தில் 128 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தலா 100 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles