தாத்தாவையும், பாட்டியையும் கொலைசெய்துவிட்டு காட்டுக்குள் பதுங்கிய பேரன் கைது!

பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்ல, கீரியகொல்ல மடுகஸ்தலாவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளி கீரியகொல்ல மடுகஸ்தலாவ வனப்பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பல்லகெடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பல்லகெடுவ பொலிஸாரும் பண்டாரவளை பொலிஸாரும் விஷேட அதிரடி படையினரும் இணைந்து குறித்த வனப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர் வனப்பகுதியினூடாக வெள்ளவாய பிரதேசத்திற்கு தம்பி செல்ல முற்பட்ட வேளையிலேயே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles