தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பல்பொருள் அங்காடியொன்றில் மர்ம நபர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறித்த பல்பொருள் அங்காடியில் வழக்கம் போல் பொருட்களை மக்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர், அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பாதுகாவலர்கள் நால்வரும், பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும் ஒருவர் பலத்த காயமுற்றார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொலிஸார், கருத்து வெளியிடுகையில்,
‘துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு கொலையாளி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான மோதல்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்.” – எனவும் அவர் கூறினார்.










