திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்துள்ளது.
இதனால் திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது எனவும், 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.