திருப்பதி காணிக்கையில் நூறு கோடி ரூபா மோசடி

திருப்பதி ஏழுமலை​யானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒருவர், தனது உள்ளாடைக்குள் மறைத்து உண்டியலிலிருந்த பணங்களை திருடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இது அவதானிக்கப்பட்டு வந்துள்ளது.சுமார் நூறு கோடி வரை இங்கு திருட்டு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்​டும் என்று மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய், தெலுங்கு தேசம் கட்சி​யின் எம்.எல்.சி ராம்​கோபால் ரெட்டி உள்ளிட்ட பலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles