பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் சிறைச்சாலை அறையில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சிறைச்சாலை பாதுகாப்பு பிரிவால் கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திலினி பிரியமாலியை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










