‘துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே யானை உயிரிழப்பு’

சடலமாக மீட்கப்பட்ட யானையானது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே பலியாகியுள்ளதென மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஹல்தமுல்ல , கொஸ்கம – இலுக்கபலன்ஸ வனப் பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி யானையின் சடலமொன்று மீட்கப்பட்டது.

உடவல வனஜீவராசிகளின் வைத்தியர் விஜித பெரேராவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது , யானை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles