துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மஹியங்கனை ஒருபடிவெவ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தூப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருபடிவெவ அரவத்த மஹியாங்கனை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது தூப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles