கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு சென்ற எவருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கட்சியைக் காட்டிக்கொடுத்த எவரும் மீண்டும் கட்சிக்கு வரமுடியாது. மக்களுக்கு வேண்டாம் என்றால் சலூன் கதவை பூட்டுவதற்கு தயார் என மஹிந்தவும் அறிவித்துவிட்டார். எனவே, அவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது.
மொட்டு கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் அவர் கூறினார்.
