தேசிய மக்கள் சக்திக்கு மலையகத்தில் பெருகிவரும் ஆதரவு!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பெருகிவருகின்றது என்று அக்கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்வதற்குரிய தயார்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றோம். 22 தேர்தல் மாவட்டங்களிலும் இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எமது அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்கும் அதேவேளை தேர்தல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பலமான பெரும்பான்மையுடன் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு மக்கள் ஆணை கிட்டும் என நம்புகின்றோம். ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய ஆதரவைவிடவும் கூடுதல் ஆதரவு வழங்க மக்கள் தயாராகிவருகின்றனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் மக்கள் மத்தியில் எமக்கான ஆதரவு அதிகரித்துவருகின்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles