ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர், ஆ.மொஹமட், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தார்.