தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக சற்று நேரத்துக்கு முன்னர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இறக்கும்போது அவருக்கு வயது 71.
தென்னிந்தியாவில் நடிகராக மட்டும் அல்ல சிறந்த அரசியல் தலைவராகவும் விஜயகாந்த் போற்றப்படுகின்றார். தமது சேவைகளால் மக்கள் மனம் வென்றவர்.
தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்காகவும் அவர் குரல் கொடுத்துவந்துள்ளார்.