கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் தேரரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம, முல்வேகம பகுதியில் வைத்தே குறித்த நபர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான குறித்த நபரே கொலையாளிகள் பயணித்த காரின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.
கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி, இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட கைக் குண், கொலையாளிகள் பயணித்த காரின் சாவி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி அதிகாலையில் விகாரை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது. இதில் 45 வயதான தேரர் ஒருவர் பலியானார். சம்பவத்தின் பின்னர் கொலையாளிகள் பயணித்த கார் தீக்கிரையாக்கப்பட்டது.










