உள்ளாட்சிசபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுமானால், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு நாளை எடுக்கவுள்ள முடிவை அடிப்படையாககக்கொண்டு, இது சம்பந்தமாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்படும் எனவும் அவர் கூறினார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3 ஆயிரம் வரையான அரச ஊழியர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். எனினும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சம்பளம் பெறுவதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.










