தேர்தலை பெறவும் போராட வேண்டியுள்ளது – விமல் ஆதங்கம்

” தேர்தலை ஒத்திவைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதே இந்த அரசின் எதிர்பார்ப்பாகும். எனவே, தேர்தலை பெறுவதற்குகூட போராட வேண்டிய நிலையே உள்ளது.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

” தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு முற்படுகின்றது. இதனை சாதாரண விடயதாக கருத முடியாது. தேர்தல் முறைமையில் மாற்றம்வரும்வரை தேர்தலை ஒத்திவைக்கும் சூத்திரம்கூட இதன் பின்னணியில் இருக்கலாம்.

தற்போதைய அரசு தேர்தலை உரிய நேரத்தில் நடத்தும் அரசு அல்ல, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால்கூட அதனையும் செய்யக்கூடிய அரசாகும். எனவே, தேர்தலை பெறுவதற்கும் கடுமையாக போராட வேண்டும்.” – எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles