உடபுசல்லாவையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு
” சுப்பையா_நிரோஷன் என்ற
உடபுசலாலாவ பிளான்டேஷன் St. Margaret டிவிஷனை சேர்ந்த இளைஞர், RODRIGO என்ற தோட்ட மேனேஜரால் தாக்க பட்டு, நுவரேலிய மருத்துவ மனையில் அனுமதி.
“தாக்கியவரை கைது செய்து விட்டோம்” என இப்போ கூவி கொண்டு வர வேண்டாம் என NPP மலையக மந்திரிகளுக்கு கூறுகிறேன்.
“இந்த கைதுகளும் நாம் சத்தம் போடுவதால் தான் நடக்கிறது”. போன வேகத்தில், அவன் பிணையில் வெளியே வருவான்.
இத்தகைய தாக்குதல்கள் கடந்த காலங்களை விட இந்த ஆட்சி காலத்தில் அதிகரித்து விட்டது.
எல்லா தோட்ட கம்பனிகாரர்களையும், எம்மையும், IGPஐயும் அழைத்து, பேசும் படி நான்
பொலிஸ் அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) விடம் பாராளுமன்றத்தில்
கூறினேன். “சரி, உடன் செய்கிறேன், மந்திரிதுமா” என எனக்கு அவர் நேரடியா உறுதி அளிச்சார். அது என்னாச்சு…?










