தொற்றாளர் எண்ணிக்கை 2752 ஆனது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது. அதனையடுத்து மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2752ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 64 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வெளிநாட்டு கடற்படையினர் உட்பட மொத்தம் 29 பேர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தின் மூலமாகவே அவர்கள் இன்று அதிகாலை 1.33 மணியளவில் இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர். சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

Related Articles

Latest Articles