மலையக சமூகத்தினதும் பொதுமக்களினதும் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பாடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண கல்வி அமைச்சரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அமரர். சந்தானம் அருள்சாமி அவர்களின் 66வது ஜனன தினம் இன்றாகும்.
தொழிற்சங்க தலைவராக, அரசியல் வாதியாக தனது வாழ்நாளில் கல்வி, சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம், மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.
மலையக கல்வி வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்காக அவர் எடுத்த முயற்சிகள், எதிர்கால தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக திகழும்.
அவரது சேவைகள் இன்று மட்டுமல்லாது நாளைய தலைமுறையினராலும் நினைவுகூரப்பட வேண்டியவை. சமூக முன்னேற்றத்திற்காக அவர் கடைப்பிடித்த கொள்கைகள், எம்மை உற்சாகப்படுத்தும் சக்தியாக விளங்குகின்றன.
அவரின் வாழ்க்கை, சிந்தனை மற்றும் தொண்டு பணிகள் எப்போதும் எமது சமூகத்திற்கும் வருங்கால தலைமுறைக்கும் ஒளியூட்டும் வழிகாட்டியாக நிலையாகும்.










