” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பெருந்தோட்ட நிர்வாகத்தின் அடாவடி செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தோட்டங்களை குத்தகை மற்றும் உப குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நிறுவனங்களும் கூட மிகவும் கீழ்த்தரமான முறையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் நடந்து கொள்கின்றன.” என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அப்புத்தளை தொட்டலாகல தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட போதே அவ்வாறு இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தோட்ட நிர்வாகங்கள் முறையாக ஊதியத்தை வழங்காலும், தோட்டத்தொழிலாளர்களை தவிர்த்து, வெளி ஆட்களை வேலைக்கு அமர்த்தியும், மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியும் தொழிலாளர்களை உள ரீதியாக நிர்வாகங்கள் தாக்குகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரத்தில் பின்னடைவில் இருந்தாலும், அவர்களுக்கென சுய கௌரவமும் சுயமரியாதையும் இருக்கின்றது. அதனை யாரும் சீண்டிப் பார்க்க முடியாது.” – என்றார்.
