‘தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 3000 வேண்டும்’ – தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு நடைபவனி

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (03.05.2022) காலை 9.30 மணிக்கு தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த தனிமனித நடைபவனி போராட்டம் காலிமுகத்திடலில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக இன்னும் மூன்று தினங்களில் சென்று அடையும் நோக்குடன் ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை தலவாக்கலை நகர மத்தியில் ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து நடைபவனியாக சென்ற அவரை கொட்டகலையில் நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார். அவருடன் நகர மக்களும் உடனிருந்தனர். மாலை அணிவித்து, ஆசி வழங்கி அவரின் போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

(கெளசல்யா)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles