” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலித் தொழிலாளர்களாக வைத்திருக்ககூடாது. அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
இதற்கான வேலைத்திட்டத்தை அரசு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு பிரதான எதிர்க்கட்சி முழு ஆதரவையும் வழங்கும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளையின் 27/2இன்கீழ் விசேட அறிக்கையொன்றை விடுத்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகைளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாகக்கருதி, அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் வலியுறுத்தினார்.
