நம்பிக்கையில்லா பிரேரணை நவம்பர் 3இல் விவாதிக்கப்படாது

நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நவம்பர் 3 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என, அவை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய குறித்த பிரேரணையைத் திருத்தி, ஒக்ரோபர் 8ஆம் நாளுக்கு முன்னதாக மீண்டும் சமர்ப்பிக்கத் தவறியமையாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் நாள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

இருப்பினும், திருத்தப்பட்ட பிரேரணையை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், திட்டமிட்டபடி இந்த விவாதம் இடம்பெறாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நவம்பர் 3ஆம் நாள், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலாக, ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக, சபாநாயகருக்கு எதிரான திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்தால், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் (பாதீடு) மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, இதற்கான விவாதத்திற்கு அரசாங்கம் நேரம் ஒதுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles